கொந்தகைக்காரர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது

நமது கொந்தகை பழமையான ஊர்தான். இப்போது அருகிலுள்ள கீழடியில் அகழாய்வு நடப்பதால் மணலூரும், கொந்தகையும் அடிக்கடி செய்தியில் அடிபடக் காண்கிறோம்.

கொந்தகை பெயர்க்காரணம் பற்றி எனக்கு கொஞ்ச நாளாகவே ஐயம் உண்டு. குந்திதேவிச் சதுர்வேதி மங்கலம்தான் கொந்தகை ஆகிவிட்டது என்கிறார்கள். இருக்கலாம். சீதேவி பூதேவி உடனுறை தெய்வநாயகப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் அவ்வூரில்தான் திருமலை ஆழ்வார் எனப்படும் திருவாய்மொழிப்பிள்ளை பிறந்தார் என்கிறார்கள். அதிலும் குழப்பம் இல்லை.

ஆனால் தனியாக திருவாய்மொழிப் பிள்ளையின் அவதார ஸ்தலம் பற்றித் தேடினால் அது பாண்டிய நாட்டிலுள்ள குண்டிகை என்கிறார்கள். அதனால் இயல்பாகவே குண்டிகைதான் கொந்தகை ஆகிவிட்டதோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது. சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு குந்திதேவியை மட்டும் சொல்கிறார்கள் போலும்.

கொந்தகை பெயர்க்காரணத்துக்கு இப்போது இழுத்துவிட்டவை ‘சிற்றிலக்கியங்கள்’ கட்டுரை நூலில் நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் இந்த வரிகள்தான்:

பொருள் புரிந்தும் புரியாமலும் திகைத்து நிற்கும் பாடல்களும் உண்டு.

குறை கொண்டு, நான்முகன் குண்டிகை நீர்பெய்து

மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி – கறை கண்ட

கண்டத்தான் சென்னிமேல் ஏறக்கழுவினான்

அண்டத்தான் சேவடியை ஆங்கு

என்பது பாடல்.

‘நான்முகன் குண்டிகை நீர் பெய்து’ எனும் தொடரில் குண்டிகை எனில் கமண்டலம் என்று தமிழ் லெக்சிகன் கூறுகிறது. ‘நான்முகன் குண்டி கை நீர் பெய்து’ என்று பிரித்தால் அதற்கு ஆழ்வார் பொறுப்பில்லை…

(எனக்கு ஏன் இந்த அற்ப சந்தோசம்?)

2 thoughts on “கொந்தகைக்காரர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது

  1. கொந்தகையில் கால் பதித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் ..நீங்க சொன்ன பெயர்க் காரணம் ,நான் ரசித்த அந்த ஊரின் இயற்கை அழகையே மறக்கடித்து விட்டது 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s